Tuesday, August 19, 2008

கதாநாயகன்

கதை எழுத வேண்டும் நீண்ட நாள் ஆவல். அந்த முயற்சியின் பலன் தன் இந்த சிறுகதை. இது கதையா இல்லை நேரத்தை விரயம் செய்யயப்பட்ட கிறுக்கலா என்பது வாசிபவர்களுகே வெளிசம். முன்னுரையை கடந்து நேராக கதைக்குள் செல்வோம்.

அந்த மார்கழி மாதத்திலே நாம் கதையின் நாயகன் எனபடுகிற ராம் பேருந்து நிலையத்திலே தான் அலுவலகம் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றான். அவன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது, அதில் வழக்கம்போல கட்டுகடங்கா கூட்டம், ஆனால் எப்படியும் இவன் போகவேண்டும். கூட்டதிலெ முண்டி அடித்து அவனுக்கு இடம் கிடைத்தது படியில், அது ஒன்றும் புதிது இல்லை அவனுக்கு கல்லுரி நாள்களில் நிறைய அனுபவம். பேருந்து கிளம்பியதும் அவன் முகத்தில் சில்லென்று பனிகாற்று வீச, அவன் முகத்தை பேருந்துக்கு உள்பக்கமாக திருப்பினான்.


பேருந்து உள்ளே இருப்பவர்களை ஒரு நோட்டம் விட்டான், ஒரு இடம் வந்தும் அவன் கண் அசைய மறுத்து. அதற்கு இடையூரால நடத்துனர் குரல் "யார் எல்லாம் டிக்கெட் எடுக்கலை, சீக்கிரம் எடுங்க" என்றார். அவர்க்கு வேகமாக சில்லறை கொடுத்து விட்டு. மீண்டும் தன் பார்வை சென்ற பழைய இடத்திற்கு சென்றான்.அங்கு ஒரு நல்ல அழகு உள்ள பெண் நின்று கொண்டு இருந்தாள்.அவள் அழகை வர்ணித்து கதையின் போக்கை மாற்ற கதை ஆசிரியருக்கு விருப்பம் இல்லாததால் நீங்கள்(யாராவது வாசித்தல்) யூகித்து கொள்ளுங்கள். அவள் நின்ற இடத்தின் அருகில் சுழன்ற ராம்மின் கண்கள், அவளை சுற்ற ஆரமித்தது, நொடியில் அவளை கண்கள் முலம் மனதிகுள் பதித்தான்.

மீண்டும் அவள் நோக்க ஆரம்பித்தான், இம்முறை அவள் முகத்தை, பார்த்த அவனுக்கு ஆச்சர்யம் அவளும் இவனையே பார்ப்பது போன்று, சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அவளை பார்பதாக தெரியவில்லை, அதை உறுதி படுத்தி கொண்டு மீண்டும் அவளை நோக்கினான், அவள் பார்வை அவனை விட்டு அகன்றதாக தெரியவில்லை. அந்த நிகழ்வை ஒரு உலக அதிசயமாகவே எண்ணினான்.ஏனெனில் கல்லுரி நாள்களில் எவளவோ கடுமையாக முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனதால் பெண்களிடமே ஒரு வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பு எல்லாம் மறைந்து விருப்பாய் அவளை பார்த்தான், அவளும் இவனையே பார்க்கிறாள் என்று மீண்டும் உறுதி படுத்திகொண்டான்


பார்வையிலே நேரம் கடத்தாமல் அவளை நோக்கி புனைகை பூவை உதிர்த்தான். அவளும் மறுமொழியாக புனகையை பதிலாய் தந்தாள். இந்த ரம்யமான சுழலுக்கு இடையுரலாக ராம் இறங்கும் இடம் வந்தது. வேறு ஒரு நாளாக இருந்தால் அவளுடனே கூட போய் இருப்பான், அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் வேண்ட வெறுப்பாக பேருந்தில் இருந்து இறங்கினான். இறங்குவதக்கு முன் அவள் இவனை நோக்கி கண்களால் விடை பெற்றாள். அன்று பகல் முழுவதும் அவன் நனைவுகள் அவளை சுற்றியே வந்தது.


இன்று நடத்த சம்பவம் அவனுக்கு ஜோசியத்தின் மீது ஒரு அபார நம்பிக்கை வந்தது, ஏனெனில் ஜோசியதிலே அவனுக்கு காதல் கல்யாணமே நடக்கும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்று ஜோசியகர்கள் சொல்லும் பொது அதை நம்பவில்லை இப்போது அதை நம்பினான். அதை பரிச்சை பண்ணவே தனக்கு திருமணம் செயவேண்டும் என்று ராம் அம்மா சொல்லும்போது இதை மனதில் வைத்துக்கொண்டு நாள்களை கடத்தினான்.

அவன் எதிர் பார்த்த அந்த தருணம் இவ்வளவு சீக்கிரம் நடந்ததால் அவனுக்கு வானளாவிய மகிழ்ச்சி, அன்று பகலும் இரவும் ஆமை போல செல்வதாய் உணர்ந்தான். அடுத்த நாள் எப்போது வரும் என்று நொடிகளை எண்ணிக்கொண்டு இருந்தான். பொழுதை கழித்தான், இரவும் கடந்தது அதி காலையிலே எழுந்து குளித்து நேற்று வாங்கிய புது உடைகளை மாட்டி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான் இன்று அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தவனாய் காத்து இருந்தான்.

பேருந்தும் வந்தது அதிகம் கூட்டம் இல்லை ஏறிய உடனே அவன் கண்கள் அவளை தேடின அவளும் அகப்பட்டாள், ஆனால் அவள் இவனை பார்த்தும் அவள் முகத்தில் எந்த அசைவையும் காணமுடியவில்லை. மாறாக மிகவும் சோகமாக காணப்பட்டாள்.எதிர் பார்க்காத இந்த ஏமாற்டத்தை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். பேருந்து கிளம்பு முன் வேறு சிலர் ஏறினார்கள்.


"என்ன கொடுமை சார்" என மனசுக்குள்ள நினைத்தாலும்,மறுபடியும் ஒரு கல் எறிவோம் என்று அவளை பார்த்தால் இம்முறை அவனுக்கு கை மேல் கனியே கிடைத்தது.அவள் இவனை சந்தோசமாக பார்த்து குறுநகை புரிந்தாள். அவன் வேதனை பகலவனை கண்ட பனி போல மறைந்து மலர்ந்த செந்தாமரை முகத்தை போல் ஆனது.


அவளை பார்த்து அவனும் சிரித்தான். யாரோ உறவுகாரகள் இருந்திருப்பார்கள் அதனால் தான் அவளிடம் தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாக எண்ணினான். அதை புரிந்து கொள்ளாமல் அவளை தவறை நினைததற்காய் அவளின் பேசும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணினான்.

இவ்வாறாக ராம் யோசித்து கொண்டு இருக்கையில் அவன் எதிர் பாரவகையிலாக அடுத்து வந்த பேருந்து நிறுத்ததிலே அவள் இறங்கினாள். முன் அறிவிப்பு இன்றி நடந்த காரியத்தில் செய்வது அறியாமல் ஒரு கணம் யோசித்தான் பின் சுதாரித்து கொண்டு அவனும் இறங்கினான் அவனுடன் அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களும் இறங்கினார்கள். இறங்கியதும் அவள் போகும் திசையிலே நடந்து சென்றான். அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஆவலை வேகமாக நடந்து பின் தொடர்ந்தான். அவளுக்கு கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் நின்று அவன் "ஹலோ கொஞ்சம் நில்லுங்கள்" என்றான். அவள் அவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரமித்தாள்.


அவனும் விடவில்லை தொடர்ந்து சென்றான். மீண்டும் ஒரு முறை ஹலோ என்று சொல்ல வாய் எடுத்தான். இவன் "ஹலோ" என்று ஒரு குரல் தன் பின்புறம் இருந்து வருவதை கேட்டான். ராம் திரும்பி என்ன என்று கேட்பதற்குள் அவனை கூப்பிட்ட குரலுக்கு சொந்தக்காரன் ராம் முகத்தில் ஒரு குத்து விட்டான். குத்து விழுந்த வேகத்தில் அவன் மூர்ச்சை அடைந்தான்.
மூர்ச்சை தெளிந்து பார்கையில் அவன் ஒரு மருத்துவமையில் இருப்பதாய் உணர்ந்தான்.தனக்கு என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க அவனால் முடியவில்லை. காதல் கதைக்கு எப்போதும் வில்லனின் ஆரம்பம் குறைத்த பச்சம் ஒரு கனவு டூயட் பாட்டு முடிஞ்சவுடனே தானே வரும். ஆனால் எனக்கு இன்னும் காதலே ஆரமிக்கலை அதுக்குள்ளே வில்லனா? என நினைத்து கொண்டு எழுந்திரிக்க முயன்றான்.

அதற்குள் "என்னை மனிக்கவும்" என்ற குரலை கேட்டு தன் பார்வையை திருப்பினான்.அவனை பார்த்தும் அவனால் நம்பமுடிய வில்லை அவன் வேறு யாருமல்ல. ராம் மருத்துவமனை வர காரணமாக இருந்தவன். அவன் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். அவள் யாருமல்ல ராமின் காதலி என்று நினைத்து கொன்று இருக்கும் அந்த பைங்கிளி. அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து அவன் குழப்பம் மேலும் அதிகமானது.

ராமின் எண்ணத்திற்கு இடையுரலாக அவன் இடை மறித்தான் "என் பெயர் சுந்தர், நடந்த சம்பபதிற்காக நான் மிகவும் வருத்தபடுகிறேன். தயவு செய்து மனதில் ஒன்றும் வைத்து கொள்ளவேண்டாம்". அவன் சொல்லி முடித்தவுடனே அவள் ராமிடம் "இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு" என்றாள். அவள் குரலை கேட்டு ஆகா என்ன ஒரு அருமையான தெய்விக குரல் என்று நினைத்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள். " என் பெயர் பல்லவி, நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை. உங்களால நான் இன்றைக்கு புது வாழ்வு பெற்றேன்"

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே ராம் மனம் ஒரு புள்ளி மானை போல துள்ளி குதித்தது என்று சொன்னால் அது உண்மை. இவள் என் மீது வைத்திருக்கும் காதலுக்கு என்ன மரியாதை, இப்படி ஒரு பெண்ணை அடைய நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என எண்ணினான்.

இப்போது சுந்தர் இடைமறித்து " ஆமாங்க நானும் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லேன்னா நாங்க ரெண்டு பெரும் சேரமுடியாமல் போய் இருக்கும்". இதை கேட்ட ராம் சுந்தரை உற்று பார்த்தான், அவன் பேசியதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறானா என்று நினைத்தான்.

மீண்டும் பல்லவி தன் பல்லவியை தொடர்ந்தாள், " ஆமா இவர் சொல்லுறது உண்மை, நானும் இவரும் காதலர்கள்,எங்களுக்குள் ஒரு சின்ன மனஸ்தாபம், அதை சரி செய்ய பலமுறை முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. உங்களை பேருந்து சந்திப்பிலே பார்த்தவுடனே எனக்கு இந்த யோசனை வந்தது. அதின் பலனாக எனக்கு நான் தொலைத்து திருப்ப கிடைத்தது. என்னை மனிசுடுங்க அண்ணா".அதன் பின் அவள் பேசிய ஏதும் அவன் காதில் விழவில்லை.

"ஐயோ யாராவது என்னை காப்பாற்றுங்கள், இங்கு என்ன நடக்கிறது,நான் இருப்பது கனவு உலகிலையா இல்லை நினவு உலகிலா ஏன் எல்லோரும் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள்" என்று சப்தமிட்டான்.


அப்போது அந்த வழியாக வந்த மருத்துவர் அவனிடம் வந்து "ராம் நீங்க வீட்டுக்கு போகலாம், நீங்கள் பரிபுரணமாய் இருகிறார்கள், நான் தரும் மாத்திரைகளை ஒரு வாரம் சாபிடுங்கள்" என்றதும் தன்னை சுற்றிலும் பார்த்தான், மருத்துவர் தவிர யாரும் அங்கு இல்லை, அவன் மருத்துவரிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்தான்.அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய வந்தது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம்மாக தெரிந்தது அவன் கனவு காணவில்லை என்று, மருத்துவமனையை விட்டு ஒரு தெளிந்த சிந்தையுடன் ராம் வெளியே வந்தான். நினைவுகளை பினோக்கினான், பல்லவி கூறியதை கேட்டு அதிக உணர்ச்சி வசத்தால் தான் மீண்டும் நினவு இழந்துருக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் கழித்து சென்று இருக்க வேண்டும்.

இன்று காலையில் தன்னை பார்த்து அவள் எந்த சலானம் இல்லாமல் இருந்ததற்கும் இப்பொது விடை கிடைத்தது, பல்லவி சுந்தரை எதிர் பார்த்து காத்து இருந்திருப்பாள், அவன் வராததால் அவள் சோகமாக இருந்திருப்பாள். சுந்தர் பேருந்திலே அடுத்த நிறுத்ததிலே ஏறி இருப்பான். அவன் ஏறியதும் அவள் தன் காதல் சோதனையை தொடர்ந்து இருப்பாள்.

முதலில் அம்மாவிடம் சொல்ல வேண்டும் தனக்கு ஒரு நல்ல பெண் பாருங்கள் என்று மனதில் நினைத்தான். அது மட்டுமில்லாமல் இந்த கதையில் தன்னை கதைநாயகனாக சித்தரித்த கதை ஆசிரியரை தன் மனதிற்குள் வசை பாடிகொண்டே சென்றான்.

6 comments:

MSATHIA said...

\\அவன் வேதனை பகலவனை கண்ட பனி போல மறைந்து மலர்ந்த செந்தாமரை முகத்தை போல் ஆனது\\
இதல்லாம் கொஞ்சம் அதிகப்படி..

இந்த நீண்ட கதையை ஒரு சுருக்கலாமே.

நசரேயன் said...

ஆரமிச்சா நிறுத்த முடியலை :):)

இந்த ஆர்வத்தை தூண்டிய உனக்கு தான் நன்றி சொல்லணும்

முகவை மைந்தன் said...

மாப்பு, கலக்கிட்ட.

உவமை இந்த கதையில கொஞ்சம் கிண்டலான தொனியக் குடுத்துச்சு. நல்லாத் தான் இருக்குது.

//இந்த நீண்ட கதையை ஒரு சுருக்கலாமே.//
சத்யா சொல்றதை நம்பாத. கதை விறு,விறுப்பா கொஞ்சம் பின நவீனத்துவ சாயல்ல இருந்துச்சு.

இன்னும் ரெண்டு மூணு கதை எழுதினா பட்டையக் கிளப்பிருவ போல. வாழ்த்துகள்.

Anonymous said...

Really nice story. Anegama ella ambalyngalum ethee anupavam pattiruppanga. Very good and nice story. All the best.

தமிழ் said...

பெண்களைப் பற்றி தவறாக எழுதிய ஆசிரியரை அகில உலக தி மு க சார்பாக கண்டிக்கின்றோம்!

பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள் போல காட்டி இருக்கின்றீர்கள். ஆண் அதிகாரங்கள் ஒழிக்கப்படவேண்டும், பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக வருகின்ற அக்டோபர் திங்கள் ஒரு மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

... அப்பாடா ரொம்ப பேசியாச்சு, ஒரு சோடா குடுங்கப்பா...!

கதைக்கு வரவோம், நல்லா எழுதி இருக்க... வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

/*
கதைக்கு வரவோம், நல்லா எழுதி இருக்க... வாழ்த்துக்கள்!*/
நன்றி தமிழ்