Wednesday, August 20, 2008

காதல் கடிதம்

அன்புள்ள தமிழ்வாணனுக்கு,


கல்லுரியின் இறுதி நாளில் நிற்கும் நாம் இந்த முன்று வருடங்கள் உதட்டில் இருந்து ஆயிரம் வார்த்தைகள் பேசிஇருக்கலாம், ஆனால் நாம் உள்ளம் பேசிய வார்த்தைகளை விரிவாக எழுத முன்று யுகங்கள் போதாது என்பதை நான் அறிவேன்.

எதற்கும் பிந்துகிற நான் இந்த மடல் விசயத்தில் முந்த வேண்டும் என்பதகாகவும், என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது என்பதை வெளிபடுத்தவும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்த விரும்பினேன்.

நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

இந்த கல் நெஞ்சில் கள்வனாய் நுழைந்து காதல் என்னும் மந்திரம் ஓதி கலை கரைத்து பால் ஆகினாய். கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.

நீ எனக்குள் இருக்கும் ஆனந்தத்தில் என்மனமும் பஞ்சு போல மிதந்து வானம் சென்று அங்கு உள்ள நச்த்திரங்களை அழைத்து வந்து மனதிற்குள் பறக்க விட்டது.

காதல் ஒரு கானல் நீர் என்று பலமுறை பெரியவர்கள் குறும் போது இது அவர்களின் இயலாமை என் நினைத்த நான் அதை மறு பரிசிலனை செய்யும் போது நான் அறிந்த உண்மையை உங்களுக்கும் உணர்த்த வேண்டும்..

கானல் நீர் அழகானது அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதை பருகி நாம் தாகம் தீர்க்க முடியாது என்பதை மறுக்க முடியாது.அதை போல் இந்த கல்லுரி காதல் நம் வாழ்கை தாகத்தை தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.

கல்லூரி காதலை நடமுறைக்கு ஒப்பிட்டால் அது எட்டு சுரக்காய் போன்றது அது கறிக்கு உதவாததை போல இந்த காதலும் வாழ்கைக்கு உதவாது என்பதையும் புரிந்து கொண்டேன்.

கல்லூரியில் பயிலும் பொது காதல் செய்வதை பெருமையாக நினைக்கும் இளைஞர்களுக்கு நாமும் விதி விலக்குஅல்ல. அதுவே நாம் தலை விதியும் அல்ல என்பது உண்மை.காதல் ஒரு அத்தியாயம் வாழ்கையில் என்பது எனக்கு தெரிந்து விட்டது


வாழ்கையின் உண்மையை வெளிச்சம் இட்டு காட்டியது எனக்கு கிடைக்க போகும் எதிர்கால மண வாழ்க்கை. அதுவே இது நாள்வரையில் உண்மை என நம்பி கனவுலகில் சந்சரித்து இருப்பதை அடி கோடிட்டு காட்டியது.ஆம் ... எனக்கு திருமணம் நிச்சைக்க பட்டு விட்டது அமெரிக்க மணமகன் என் கணவன் ஆக போகிறார், திருமணம் முடிந்து அவருடம் அமெரிக்க செல்ல இருக்கிறேன்.


இந்த மடலின் ஆரம்பத்திலே தங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களை கூறிய நான் இந்த உண்மையும் சொல்லவேண்டிய கட்டாயம், இது உங்களுக்கு கசப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாம் காதல் அத்தியாத்தின் முடிவில் எனக்கு ஒரு நல் வாழ்வு ஆரம்பமாகிறது.இதே ஆரம்பம் வரைவில் நீங்களும் அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,

தாமரை செல்வி.முக்கிய குறிப்பு: பின் புறத்தில்....தயவு செய்து வாசிக்கவும்.


பின் புறத்தில்: இந்த மடல் முலம் என் மனதை திரையிட்டு கட்டியதால், என் வரிகளால் என் எதிர் கால வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பும் வரகூடாது என்பதற்க்காக, இதை படித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி அதிலே ஒரு செட்டு இந்த மடலின் விழுந்தாலும் இதில் உள்ள அத்தனை எழுத்துகள் அழிந்து விடும்.

ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்...(கடிதம் முழுவதும் எரிந்து சாம்பலானது, அது எரியும் பொது தமிழ் வாணன் கையும் சுட்டது. சாம்பலானது கடிதம் மட்டுமல்ல அவன் இதய கோட்டையும் தான். சுட்டது அவன் கைமட்டு மில்லாமல் அவன் மனதும் தான்.)

4 comments:

Sathia said...

வார்த்தை விளையாட்டுகள் நன்கு கைவருகிறதே. அழகாய் இருக்கிறது.
சொற்பிழைகளை சரிபார்க்க கோருகிறேன்.

நசரேயன் said...

வேற என்ன சொல்ல ..
தமிழ்ல எழுதனுன்னு நினைச்சா தன்னாலே வருது :):)

முகவை மைந்தன் said...

//என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது //

பிரியும் போதா!? வேற மாதிரி பொருள் தருதே ;-)

//கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.//

அருமை.

பாஸ்பரஸை பயன்படுத்திய விதம் நேர்த்தியானது. நல்ல திரைக்கதை. கடிதத்தைப் படிக்கும் போது, 'ஒருவேளை அவன் இதையே சான்றா பயன்படுத்திட்டான்னா' என்ற எண்ணம் இயல்பாகவே இருந்தது.

காதலைக் கடலை போட்டதுன்னுட்டாளே!

Nilavum Ammavum said...

இப்டி கதாநாயகியை வில்லி ஆக்கிட்டீங்களே...நல்லா இருக்கு