வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
வலியவரிடம் மாற்று பகையை விரும்பாதே, மெலியவர் மேல் பகையை ஒழியாமல் விரும்பு.
(இது அரசனை கருத்தில் கொண்டு)
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
அன்பில்லாதவன், வலிமையான துணையில்லாதவன், தன்னிடத்தே வலிமையில்லாதவன் எப்படி பகைவனின் வலிமையை அழிப்பான்.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
அஞ்சுபவன், அறியாமை கொண்டவன், நட்பில்லாதவன் மிகுந்து ஈகைகுணமுடையவனிடம் பகைவருக்கு எளிமையாவன்(அதாவது வலிமையில்லாதவனாவான்)
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
கோபத்தை நீங்காதவன், தன்னளவில் நிறையில்லாதவன் எந்நாளும் எவ்விடத்திலும் எல்லாருக்கும் (பகைவெல்ல) எளிதானவன்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
நீதிநூல்களை கல்லாதவன், தன் கடைமையை செய்யாதவன், பழிபாவம் நோக்காதவன், பண்பில்லாதவன் எதிரிக்கு இனிமையானவனாகிறான்(எளிமையான பகையாகிறான்)
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
கண்மூடித்தனமான சினத்தைவுடைவன், பெரும் காமத்தை உடையவன் எதிரி விரும்பி கொள்ளப்படுவனாகிறான்.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
ஒரு வேலையை தொடங்கும் போது கூட இருந்தும் அதை கெடுக்கும் குணத்தை உடையனின் பகையை பொருளைக்கொடுத்தாவது பெறவேண்டும். அதாவது அது மாதிரி குணமுடையோருடன் நட்பு பாராட்டக்கூடாது என்பது கருத்து
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
குணமில்லாதவன்,குற்றம் பலகொண்டவனு, நட்பில்லாதவன் ஆகிய குணங்கள் எதிரிக்கு துணையாகும்.
ஏமாப்பு உடைத்து - துணை உடையதாகும்.
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
அறிவில்லாத, அஞ்சும் பகையை பெற்றவர்குக்கு உயரிய இன்பங்கள் நீங்காது.
செறுவார் - வெற்றிபெருவோர்
இகவா - நீங்கா
சேண் - உயருள்ள
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
கல்லாதவனோடு பகைத்தலால் வரும் சிறுபொருள் எந்நாளும் அடையாதவனை எந்நாளும் புகழ் அடையாது
( குழப்பக்குறள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment