Tuesday, November 13, 2007

பொருட்பால்-நட்பியல்-பழைமை-81

பழைமை எனப்படுவது யாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமையான நட்பு என்பது நட்பின் உரிமையை தந்து அதனை சிதைத்து விடாமல் பார்த்துக்கொள்வது.

கிழமை - உரிமை.
கீழ்ந்திடா - சிதைத்திடாத



நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

உரிமையுடன் நடந்து கொள்வது நட்பின் மிக முக்கியமான தேவையாகும். அவ்வாறு நடந்து கொள்வது சான்றோரின் கடமை ஆகும்.

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

தான் கொண்ட நட்புரிமையானது தம் நண்பரிடத்திலும் காணப்படாவிட்டால் அந்த நட்பினால் பயன் இல்லை.


விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

தன்னை கேட்காமல் நட்புரிமையில் செய்த ஒரு செயலை தாமும் விரும்பியதை போன்றே இருப்பவரே நல்ல நண்பர்.


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

தான் விரும்பாத ஒரு செயலை நண்பர் செய்துவிட்டால் அதனை அறியாமை என என்னாமல் நட்புரிமை என என்னுவது நட்பிற்கு அழகு.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

தமக்கு உதவியாக இருந்தவரின் நட்பை அவர் தொலைவிடத்திற்கு சென்றாலும் விடாமல் தொடர்ந்து நட்பை/தொடர்பை காத்து வரவேண்டும்.


அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

அன்பினால் ஏற்பட்ட நட்பானது நண்பரால் தீமை ஏற்பட்ட பொழுதும் அன்பு மாறாமல் இருப்பது.


கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

உறுதியான நட்பானது தன் நண்பனை பற்றி பிறர் தவறாக பேசுவதை கேளாமல் இருப்பது. தம் நண்பன் தவறு செய்யும்பொழுது அது


கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

சரியான வழியில் ஏற்பட்ட நட்பை எந்தகாரணத்தாலும் கைவிடாத பழக்கத்தை உடையவரின் நட்பை பெற அனைவரும் விரும்புவர்.


விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பழைமையான நட்பினை எக்காரனத்தாலும் கைவிடாதவரின் நட்பை பெற அவரின் பகைவரும் விரும்புவர்.

No comments: