Wednesday, November 14, 2007

பொருட்பால்- நட்பியல், வரைவில் மகளிர் -92

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

ஒருவனை அன்புபற்றி விரும்பாமல் பொருளை விரும்பி வரும் ஆய்த்தணிந்த வளையை உடைய மகளிரின் இன்சொல்லானது இழுக்கையே தரும்

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து பண்பு உரைக்கும் குணமில்லாத மகளிரது நயத்தை ஆராய்ந்து அறிந்து அவரை பொருந்தாமல் விடல் நலமானது

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

கொடுப்பாரை விரும்பாது பொருளை விரும்பும் பொய்மையான பெண்டிரின் முயக்கமானது இருள் வீட்டில் முன்னறியா பிணத்தை தழுவினாற் போன்றது.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து சம்பாதிக்கும் அறிவினையுடைவர் பொருளை விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை பேணமாட்டார்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

தன் மதி அறிவினால் மாட்சிமையுடைய அறிவினைவுடையவர் பொதுவாய்(பொருள் பெற்று) எல்லார்க்கும் நலம் கொடுப்போரின் புல்லிய நலத்தை தீண்டார்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

தன்னுடைய நலத்தை பேணுவோர் ஆடல் பாடல்களினால் மகிழ்வுப்படுத்தும் புன்னலமுடையோரின் தோள்களை தீண்டார்
தகை - ஆடல் பாடல்
செருக்கி - களித்து

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

நிறைந்த நெஞ்சமில்லாதவர், முயங்குவன் அல்லாது பிறருடைய நெஞ்சத்தையும் பொருளையும் பேணும் மகளிரின் தோளைத்தோய்வார்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

ஆய்ந்தறியும் அறிவில்லாதவர்க்கு மாய மகளிராம் சொல் செயல்களால் வஞ்சிக்கும் மகளிரின் முயங்குதல் அணங்கை முயங்கியது போன்றது
அணங்கு- இங்கு காமநெறியான் உயிர்கொள்ளும் தெய்வமகள் என்று கொள்ளப்படுகிறது


வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

வரைமுறை இல்லாமல் வாழும் மாண்புடைய ஆபரணத்தை அணிந்தவரின் தோள்களானது அறிவில்லா கீழ்மக்கள் ஆழும் நரகமாகும்.

அளரு - நரகம்
பூரியார்- கீழ்மக்கள்


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.


இரண்டு மனத்தை(ஒருவனை விரும்பி,மற்றொருவனின் பொருள் விருப்பம்) உடைய பெண்டிரும், கள்ளும், சூதும் திருவின் ஆருளில்லாமல் விடப்பட்டவரின் நட்புகளாம்.

No comments: