Wednesday, November 14, 2007

பொருட்பால்- நட்பியல்- கள்ளுண்ணாமை-93

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

கள்ளின்மேல் ஆசெகொண்டு ஒழுகுவாரை எந்நாளும் பகைவர் அஞ்சார் அவர் ஒளியையும் இழந்து வாழ்வார்
எஞ்ஞான்றும் - என்னாளும்
உட்கம் - அச்சம்

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

கள்ளை உண்ணாதிருக்கவும். அவ்வாறு உண்ணுவது வேண்டுமெனில் சான்றோரால் எண்ணப்படுதலை வேண்டாதவரு உண்ண்ட்டும்.

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

ஈன்றவள் முகத்தின் முன்னே கள்ளுண்டு களித்தலே இன்னாது அவ்வாறிருக்க சான்றோர் முன் களித்தால் யாதாகும்?

924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

கள் என்னும் இகழும் பெருங்குற்றமுடையவர்க்கு நாணமாகிய நல்லவள் முகங்காட்டாள்
(அஃதாவது மானத்தோடு வாழார்)


925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

செய்வதறியாமை உடைவனே பொருள்கொடுத்து மெய் அறியாமையைக்கொடுக்கும் கள்ளை கொள்ளுவான்


926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.


தூங்கியவர், செத்தவரைபோன்றவரேயாவார் அதேபோல் கள்ளுண்பர் எக்காலத்தும் நஞ்சையுண்டவரே வேறெனப்படார்.

927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

கள்ளை மறைத்து குடித்து அறிவு சோர்பவர் என்னாளும் உள் ஊர் மக்களால் அவ்வாறு செய்பவரின் உள்ளே நடக்கிற காரியத்தை அலோசித்தரிந்து சிரிக்கப்படுபவராவார்

928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

கள்ளுண்பவன் மறைந்துண்டு விட்டு நான் கள்ளே குடிக்காதவன் என்று சொல்லற்க. அவ்வாறு சொல்லுதல் தன் உள்ளத்தை ஒளித்ததையே மிகுந்து காட்டும்.

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

கள்ளுண்டு களித்த ஒருவனுக்கு இது ஆகாத செயல்லென்று தெளிவித்தல் தீ விளக்கை எடுத்துக்கொண்டு நீரில் மூழ்கி தேடுதலை ஒத்தது

930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

கள்ளுண்ணும் ஒருவன் கள்ளுண்ணாத தெளிந்த பொழுதில் கள்ளுண்டு களித்த ஒருவனை காணும்பொழுது தானும் இவ்வாறு அறிவு சோர்ந்து இருப்பதை அறியான் போலும்(அதனாலே தான் மறுபடியும் கள்ளுண்கிறான்)

No comments: