Wednesday, November 14, 2007

பொருட்பால்- நட்பியல்- பகைத்திறம் தெரிதல்-88

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பகையென்னும் பண்மை விளையாட்டுக்குக்கூட வேண்டும்தன்மை உடையதாகாது


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

வில்லை உழவாக கொண்ட வீரர்களை பகை கொளினும் கொள்ளாதே
சொல்லை உழவாக கொண்ட அறிவுடையோரின் பகையை


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

தனியாளாய் இருந்துகொண்டு பலரோடு பகைகொள்பவன் பைத்தியக்காரனினும் பைத்தியம்.

தமியன் - தனியனாய்
ஏமுற்றவர்- பித்தம் கொண்டவர்


பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

இவ்வுலகின் பெருமையானது பகையைக்கூட நட்பாக்கி ஒழுகும் பண்புடைவனிடம் தங்கிற்று

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்குத்துணை இல்லை பகையோ இரண்டிருப்பின் பகைவரில் ஒருவனை தனக்குத் துணையாக்கி கொள்க


தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

தனக்கு தாழ்வு வந்தவிடத்து பகைவன் எவ்வாறாயினம் அவனிடம் சேரவோ நீங்கவோ இரு.


நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

தான் நொந்ததை கூட அறியாதிருக்கும் நட்பினிடம் தன் நோவைக்கூறாதே;
தன் விலமையின்மையை பகைவர் முன் காண்பிக்காதே.


வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

தன் வகையறிந்த, அது முடிக்கக்கூடிய வகை அறிந்து, தன்னைக்காக்கும் வழியை அறிந்திருப்பின் பகைவரிடம் காணக்கூடிய களிப்பு மறையும்.


இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள்மரம் இளையதாக இருக்கும் வேளையில் கொல்க இல்லையேல் களையும் கையை முதிர்ந்த நிலையில் அது கொல்லும்.

காழ்த்த - முதிர்ந்த


உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பகைவரின் புகழை அழிக்காதவர் நிச்சயம் உயிரோடு வாழ்வது இல்லை

No comments: