Wednesday, November 14, 2007

பொருட்பால்- நட்பியல்- மருந்து -95

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

மிகுதியியாயினும் குறைந்தாலும் காற்றை முதலாக எண்ணிய மூன்றும் நோய் செய்யும்.
குழப்படி குறளில் இதுவம் ஒன்று.
உணவும் வேலையும் அதிகமாயின் அல்லது குறைந்தாலும் வாதம் முதலாக எண்ணிய( வாதம், பித்தம், சிலேத்துமம்) ஆகிய மூன்றும் நோய் செய்யும் என்றும் பொருள் கொள்ளலாம்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

முன்பு உண்ட உணவு செரித்தபின் அதை அறிந்து அடுத்து உண்ணும் உடலுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை
அற்றல் - சீரணத்தல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

செரித்து, அளவு அறிந்து உண்க; அஃதே உடம்பை பெற்றவன் நெடுங்காலம் உய்க்கும் வழியாம்


அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

செரித்தது அறிந்து, நன்கு பசித்து மாறுபாடில்லாத உணவுகளை உண்ணக்கடவது.
மாறுபாடில்லா உணவு இங்கு மூன்று வகையாக பரிமேலழகர் உரைக்கிறார்.
ஒருவன் வசிக்கும் பகுதிக்கு மாறுபாடில்லா, உண்ணும் காலத்திற்கு மாறுபாடில்லா மற்றும் சுவைவீரியங்களினால் மாறுபாடில்லாதவை அம்மூன்றும் ஆகும்.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

மாறுபாடில்லா உணவுகளை ( தன்னுள்ளம் வேண்டிய அளவு) மறுத்து உண்ணின் உயிர்க்கு ஊறுபாடு எனும் துன்பம் விளைவித்தல் இல்லை



இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

இழிவான உணவுகளை குறைகளை அறிந்து உண்பனிடம் எப்படி அழியாமல் இருக்குமோ அதே போல் மிகப்பெருமளவு உண்ணுபவனிடம் நோயானது நீங்காது நிற்கும்


தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

தன் உடலும் காலுமும் தெரியாமல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் அளவில்லாமல் வளரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோயை அறிந்து அதன் பின் உள்ள காரணத்தை அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து (மருத்துவம்) பிழைபடாமல் செய்யவேண்டும்


உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

நோயுற்றவன் அளவையும் பிணி அளவையும் காலத்தின் அளவையும் கருதி கற்றவன் மருத்துவம் செய்வான்.


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

மருந்து என்பது நான்கு பகுதிகளை கொண்டது; மருத்துவன், நோயுற்றவன், மருந்து, அந்த மருந்தை பிழையில்லாமல் செய்பவன் ஆகிய நான்காம்.

No comments: